சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்
திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான நீடாமங்கலம் அருகே பூவனூரில் உள்ள சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைமுன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. சதுரங்கவல்லபநாதருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு ராஜகணபதி, யமுனாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story