திருவிசநல்லூர் மடத்தில் கங்கை புனித நீராடல் நிகழ்ச்சி


திருவிசநல்லூர் மடத்தில் கங்கை புனித நீராடல் நிகழ்ச்சி
x

திருவிசநல்லூர் மடத்தில் கங்கை புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர் அருகே உள்ள திருவிசநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீதர அய்யா. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை அமாவாசை தினத்தன்று தனது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக வைத்திருந்த உணவுப் பொருட்களை அன்னதானம் செய்தார். இதனால் பெரும் பாவம் ஏற்பட்டு விட்டதாகவும், அதை போக்க கங்கை ஆற்றில் குளிக்க வேண்டும் என சிலர் கூறி உள்ளனர். இதையடுத்து ஸ்ரீதர அய்யா கங்கையை போற்றி பாடல்கள் பாட அவரது வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நீர் பொங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசை நாளில் திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவால் மடத்தில் கங்கை புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறும். வழக்கம்போல் நேற்று கார்த்திகை அமாவாசையையொட்டி கங்கை புனித நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.


Next Story