மழைமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மழைமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மழைமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த மழைமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ேநற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவியப்பொடி, விபூதி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story