ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை
ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆடிப்பூர தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 22-ந் தேதி தேர்திருவிழா நடைபெறுகிறது. அதற்காக நாள் செய்யும் விழா நடைபெற்றது. நாள் செய்யும் விழாவை முன்னிட்டு கீழ ரத வீதியில் உள்ள தேரை மூடப்பட்டிருந்த தகரங்கள் அகற்றப்பட்டு தேர் சுத்தம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆண்டாள் கோவில் தேருக்கு நாள் செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் தேர் தயார் ஆகும் பணி நடைபெறுகிறது. மேலும் ஜூலை மாதம் 14-ந் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 22-ந் தேதி அன்று தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்துள்ளனர்.