அய்யனார் கோவில் சிறப்பு பூஜை
காவல்காரன்பட்டி அய்யனார் கோவில் சிறப்பு பூஜை நடந்தது.
தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கன்னிமாரம்மன், கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளது. இக்கோவில் 14 ஆண்டுகளாக எந்த திருவிழாவும் நடைபெற வில்லை. இதனால் இந்தாண்டு திருவிழாவை 3 மாதத்தில் நடத்துவதாக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திரளான பக்தர்கள் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அய்யனார், கன்னிமாரம்மன், கருப்பசாமி ஆகிய சுவாமிகளுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.பின்னர் புன்னிய தீர்த்தம் மூலமும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும் திருவிழா நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் பொதுமக்கள், விழாக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.