உலக நன்மை வேண்டி காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
உலக நன்மை வேண்டி காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின்னர் அம்மன் மற்றும் காளியம்மன் சிரசுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. உலக அமைதி வேண்டி பல்வேறு வேத மந்திரங்கள் முழங்க மங்கள தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனை நோக்கி பல்வேறு பாடல்கள் பாடி வழிபட்டனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையில் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story