லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
வளவனூர் அருகே லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழுப்புரம்
வளவனூர்,
வளவனூர் அருகே பா.வில்லியனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி சிரவண தீபம் ஏற்றுதல் மற்றும் சிறப்பு பூஜை நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதையொட்டி மதியம் 2 மணியளவில் மூலவர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாள் கனகவல்லி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மாலையில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட கம்பம் முன்பு எழுந்தருள செய்தனர். இதையடுத்து சிரவண தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story