மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில் சிறப்பு பூஜை


மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு துளசிங்கநகர் அம்மா பூமாதேவி கோவிலில் ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, திருப்பள்ளியெழுச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மஞ்சள், பால், தேன், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் அபிஷேகம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11-35 மணிக்கு சிறப்பு அன்னதான பூஜையும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story