சேவூர் புற்றுக்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
சேவூர் புற்றுக்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
சேவூர்,
சேவூரில் அருள்பாலிக்கும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும் மாட்டூர் அறவா என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராணப்பெயர் ரிஷபாபுரி (மாட்டூர்). அதாவது மாடும், புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது. இவ்வளவு சிறப்புடைய, ஆன்மிகத் திருத்தலமாக சேவூர் விளங்குகிறது. சேவூர் முறியாண்டம்பாளையம் காமராஜ் நகரில் அறம், பொருள், இன்பமும், ஆற்றலும், ஆயுளும், ஆத்ம ஞானமும் பூத்து புகழ் சிறக்க திறம் பெற்று அன்னையாய், தேச நலம் புரிய திவ்ய வரம் அருளும் கற்பூர நாயகி கருநாக பாம்பெனவே வளர்ந்து நிற்கும் கார் கூந்தல் அள்ளி முடிந்து, மங்கலமாய் திகழ்கின்ற அன்னை பராசக்தியாய் புற்றுக்கண் கொண்டு வேண்டுவதை வேண்டும் வண்ணமாய் அள்ளி, வரம் தரும் அன்னை புற்றுக்கண் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். அந்த அன்னைக்கு தமிழ் புத்தாண்டு தினமான நேற்று 18 வகையான திரவிய அபிஷேகம் நடந்தது அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றுக்கண் மாரியம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.