மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 Nov 2022 7:00 PM GMT (Updated: 2022-11-24T00:31:05+05:30)

அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சயன நிலையில் மாசாணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிறமாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

விஷேச நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். மேலும் இந்த கோவிலில் நடைபெறும் அமாவாசை பூஜை சக்தி வாய்ந்தது என்பது ஐதீகம்.

சிறப்பு பூஜை

இந்த நிலையில் அமாவாசையையொட்டி நேற்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் அம்மனுக்கு வேண்டுதல் வைத்து, மிளகாயை அரைத்து நீதிக்கல் தெய்வத்திற்கு பூசி வழிபட்டனர். இதுதவிர வேண்டுதலை முறையீட்டு சீட்டில் எழுதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

பாதுகாப்பு

அமாவாசையையொட்டி ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சிறப்பு பூஜையையொட்டி கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story