வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர்

வைகாசி விசாகத்தையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் ஜாதிக்காய், முந்திரி, திராட்சை, தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும், பல்வேறு வகையான மூலிகைகள், பழங்களும் இடப்பட்டன. அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திரவியபொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் அரியலூர் நகரில் உள்ள பால தண்டாயுதபாணி கோவில், கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமான், ஆலந்துறையார் கோவிலில் உள்ள முருகப்பெருமான், கள்ளக்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குறைதீர்க்கும் குமரன் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.


Next Story