நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை


நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை
x

ஏகாதசியையொட்டி, நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

தேனி

பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் உள்ளது. இங்கு ஏகாதசியையொட்டி கிருஷ்ணர்-மாதுரிக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் மங்கல திரவிய பொருள்களால் அபிஷேகம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தது.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம், ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர அர்ச்சனை பூஜைகளும் நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க வேண்டி மகாமந்திர கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. பூஜையில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story