பாதாளசெம்பு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை


பாதாளசெம்பு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Dec 2022 12:30 AM IST (Updated: 24 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டியார்சத்திரம் அருகே பாதாளசெம்பு முருகன் கோவிலில் அமாவாசையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கம்பட்டியில் பாதாளசெம்பு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையொட்டி நேற்று முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. பாதாளசெம்பு முருகனுக்கு கருங்காலி மாலைகளை பக்தர்கள் அணிவித்து வழிபட்டனர். பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பக்தர்களுக்கு மூலிகை திருநீறை சித்தா அருள்சாமி அறிவாதீனம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல், மதுைர, நெல்லை, கோவை, கரூர், அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story