கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வருடந்தோறும் தீபாவளி பண்டிகை மறுநாள் கேதார கவுரி விரதத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை முடிந்து மறுநாளான நேற்று கேதாரகவுரி விரத சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கேதார கவுரி கலசம் வைக்கப்பட்டு காலை 10.30 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் தங்களது கணவருடைய ஆயுட்காலம் நீடிக்க வேண்டி விரதமிருந்ததுடன் பழங்கள், பலகாரங்கள் வைத்தும், கலசம் முன்பு பூக்களை தூவி சாமியை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story