பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி,
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷம்.ஏனெனில் புரட்டாசி மாதம் தான் திருப்பதியில் கோவில் கொண்ட வெங்கடேச பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். அது போல் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு இம்மையில் வேண்டிய நற்பலன்களும் மறுமையில் விடுபேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை நேற்று வந்தது. இதைெயாட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூைஜ நடைபெற்றது. திருப்புல்லாணி ஸ்ரீஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் கல்யாண ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிக்கல் அருகே ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவளநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள்கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது.
தொண்டி
திருவாடானை, தொண்டி பகுதியில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாண்டுகுடி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதேபோல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோவில், புலியூர் ஸ்ரீருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், திருவாடானை பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கீழக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில், மண்டலகோட்டை பிருந்தாவன நாத பெருமாள் கோவில், முகில்தகம் சொர்ண வருஷம் பெய்த பெருமாள் கோவில், கீழ்க்குடி சிவசூரிய பெருமாள் கோவில், கட்டவிளாகம் வரதராஜ பெருமாள் கோவில், கள்ளவழியேந்தல் சீனிவாச பெருமாள் கோவில், மற்றும் திருவாடானை தொண்டி, பகுதியில் உள்ள பெருமாள் ஆஞ்சநேயர் ஸ்ரீ கிருஷ்ணர், இடையன் வயல் ஸ்ரீராமர் பாத கோவிலில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.