பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்காய்பட்டியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில், ஏழாயிரம்பண்ணை காட்டு பெருமாள் கோவில், சிப்பிப்பாறை மலையில் உள்ள பெருமாள் கோவில், செவல்பட்டி மலையின் மீது உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில், கீழத்தாயில்பட்டி பெருமாள் கோவில், சங்கர பாண்டிபுரம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story