பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
விருதுநகர்
ஆலங்குளம்,
ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தரராஜ பெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால் பெருமாள் கோவில், அக்கரைபட்டி நவநீத பெருமாள் கோவில், புலிப்பாரைபட்டி வரதராஜ பெருமாள் கோவில், காக்கிவாடன்பட்டி நாராயண பெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகுல பெருமாள் கோவில், நதிக்குடி திருவேங்கிட பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான ெபாருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story