வி.புதூர் அய்யப்பன் கோவிவில் சிறப்பு பூஜை


வி.புதூர் அய்யப்பன் கோவிவில் சிறப்பு பூஜை
x

வி.புதூர் அய்யப்பன் கோவிவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம்-ராஜபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வி.புதூர் அய்யப்பன் கோவிலில் ஆனி மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நெய், பால் அபிஷேகம், உஷபூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் அத்தாழ பூஜை, படிபூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வி.புதூர் அய்யப்பன் கோவில் அன்னதான டிரஸ்டி சத்திரப்பட்டி சுந்தரராஜன், சத்திரப்பட்டி தொழிலதிபர் காசிவிஸ்வநாதன், கோவில் நிர்வாகிகள் முனியாண்டி, சுப்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story