வன்னி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை


வன்னி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
x

சாத்தூர் அருகே வன்னி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே பெரியஓடைப்பட்டியில் ஸ்ரீவன்னி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக விநாயகருக்கு சந்தனம், பால், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சாத்தூரில் மெயின் ரோட்டில் நீதிமன்ற வாசலில் உள்ள விநாயகர் கோவில், வெள்ளக்கரை ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.



Next Story