வென்னிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று 5-ம் நாள் பூஜை நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணி முதல் மதியம் 12½ மணிவரை கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டிஹோமம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர். நாளை (திங்கட்கிழமை) சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.