விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு


விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
x

விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் புனவாசல் மழுப்பெருத்த விநாயகர் கோவிலில் இன்று சதுர்த்தி வழிபாடு நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், வேளுக்குடி அச்சம் தீர்த்த விநாயகர், மலைமேல் விநாயகர், லெட்சுமாங்குடி கலிதீர்த்த ராஜ விநாயகர், உச்சுவாடி நர்த்தன விநாயகர், பழையனூர் வெள்ளை விநாயகர் மற்றும் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு நடந்தது.


Next Story