அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புன்னம் மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பேரூர் அம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டி அம்மன், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், தவிட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், நஞ்சை புகழூர் பாகவல்லி அம்பிகை, திருக்காடுதுறை மாரியம்மன் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.