அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அழகு பார்வதி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு திருநீறு, இளநீர், பஞ்சாமிர்தம், பால், உள்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல வெற்றிலையூரணி காளியம்மன் கோவில், கீழச்செல்லையாபுரத்தில் உள்ள செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், மார்க்க நாதபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில், மடத்துப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில், சத்திரப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story