ஐப்பசி மாத அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஐப்பசி மாத அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பச்சை நிற பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், தளவாப்பாளையம் மாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், மண்மங்கலம் புதுகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நொய்யல் அருகே சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையொட்டி மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் நொய்யலில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன் கோவில், உப்பு பாளையம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், மேகபாலீஸ்வரர் கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கோவில்களில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story