ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் அமாவாசை திதி, மூல நட்சத்திரத்தில் ராமபிரானின் தூதன் அனுமன் அவதரித்த திருநாள் ஆகும். அத்தகைய சிறப்பு பெற்ற அனுமன் ஜெயந்தி நேற்று வந்தது.

இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் உள்ள ஸ்ரீஜெயவீர அனுமன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1,008 வடமாலை

இதேபோல் தேவகோட்டை அருகே மேலச்செம்பொன்மாரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மானாமதுரையில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், அய்யப்ப பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று 1008 வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

வெற்றி தரும் ஆஞ்சநேயர்

இதேபோல் தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் உள்ள வெற்றி தரும் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீரஆஞ்சநேயர்

திருப்பத்தூர் நகரின் தொன்மை வாய்ந்த கோவில்களில் ஒன்று மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு உற்சவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மூலவர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் மேற்கொண்டனர். இரவு 7 மணிக்கு உற்சவர் மின்னொளி ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். பக்தர்களுக்கு வீர ஆஞ்சநேயர்சாமி திருக்கோவில் ஆலய நிர்வாக கமிட்டி சார்பில் பிரசாதம் வழங்கபட்டது.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story