சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


சதுர்த்தியையொட்டி  விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபி

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

கோபி வேலுமணி நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோபி வடக்கு வீதியில் முத்து மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், எலுமிச்சை பழம் சாறு, இளநீர், விபூதி சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் கோபி வடக்கு வீதி சித்தி விநாயகர் கோவில், வாய்க்கால் ரோடு அரசமர விநாயகர் கோவில், சென்னியப்பா நகரில் உள்ள காரிய சித்தி விநாயகர் கோவில், கிருஷ்ணன் வீதி ஜி.சி.ஆர். நகரில் உள்ள மகாசக்தி விநாயகர் கோவில், மாதேசியப்பன் வீதி மாதேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் உள்பட கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையம் பாலாஜி நகர் ராஜ கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

அந்தியூர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ராஜகணபதிக்கு அருகம்புல் மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு கொழுக்கட்டை மற்றும் சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது. தவுட்டுப்பாளையம் பாலம் அருகே உள்ள கெட்டி விநாயகர் கோவில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரட்டுப்பாளையம் அரசு பணிமனை முன்பு உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

அந்தியூரை அடுத்த வேம்பத்தி வெள்ளாளபாளையம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜகணபதிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

பெருந்துறை

பெருந்துறை குன்னத்தூர் ரோடு, பெத்தாம்பாளையம் பிரிவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவிலில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்ட சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.பி.எஸ்.மணி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருள்ஜோதிசெல்வராஜ் மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

கொடுமுடி

கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் மணிக்கூண்டு சித்தி விநாயகர், காங்கேயம் சாலை ராஜகணபதி கோவில், மார்க்கெட் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில் மற்றும் கொடுமுடி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டார்கள்.

கொடுமுடியில் மகுடேஸ்வரர் பெருமாள் கோவில் முன்பாக உள்ள முக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியைெயாட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத்ெதாடர்ந்து விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு உற்சவர் திருவீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி சந்தைப்பேட்டை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.


Next Story