கார்த்திகை மாத சிவராத்திரியையொட்டி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
கார்த்திகை மாத சிவராத்திரியையொட்டி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கரூர்
வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சைபுகழூர் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை கார்த்திகை மாத சிவராத்திரியையொட்டி சிவனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம், மணிகண்டேஸ்வரர் ஆகிய கோவில்களில் கார்த்திகை மாத சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
Related Tags :
Next Story