திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை


திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது

ராமநாதபுரம்

திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு பூஜை

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் ராமநாதபுரத்தில் உள்ள சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று பாலதண்டாயுதபாணிக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றன. இதைதொடர்ந்து கோவிலின் முன் பகுதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவிலிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. அதுபோல் ஸ்ரீவழிவிடு முருகன் கோவிலிலும் நேற்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகம்

இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் மேலவாசல் முருகபெருமானுக்கும் நேற்று அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றன. திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய குவிந்திருந்தனர்.


Next Story