பெரியகுளம், போடியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெரியகுளம், போடியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரியகுளம் தென்கரையில் உள்ள பிரசித்திபெற்ற காளஹஸ்தீசுவரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூைஜ மற்றும் வழிபாடு நடைபெற்றது. அப்போது சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதர் மலைக்கோவிலில் சுவாமிக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூைஜ செய்யப்பட்டது.
பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அப்போது சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், தென்கரை கம்பம் சாலையில் உள்ள காளியம்மன் கோவில், வரம் சித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்பசுவாமி கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தர். இதேபோல் போடி சத்திரம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சுப்பிரமணியசுவாமி கோவில், பிச்சாங்கரை கீழ சொக்கநாதர் கோவில், மேல சொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், பரமசிவன் மலைக்கோவிலில் சிறப்பு பூைஜ நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.