பெரிய வியாழன் சிறப்பு பிரார்த்தனை


பெரிய வியாழன் சிறப்பு பிரார்த்தனை
x

பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு பிரார்த்தனையும், பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடந்தது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு பிரார்த்தனையும், பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடந்தது.

பெரிய வியாழன்

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாளில் ஏசு தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் பெரிய வியாழன் அன்று பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

அதன்படி பூண்டி மாதா பேராலயத்தில் நேற்று பெரிய வியாழனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதை முன்னிட்டு பூண்டி மாதா பேராலயத்தில் தேர்வு செய்யப்பட்ட பங்கு மக்கள் 12 பேரின் பாதங்களை அதிபர் சாம்சன் கழுவி வணங்கினார்.

புனித வெள்ளி

இதை தொடர்ந்து நற்கருணை வழிபாடு நடந்தது. இதில் பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி இன்று (வெள்ளிக்கிழமை)அனுசரிக்கப்படுகிறது. ஏசு சிலுவையில் அறையப்படுவதை நினைத்து மக்கள் மனமுருகி ஆராதனை செய்வார்கள்.

சிறப்பு திருப்பலி

நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதை முன்னிட்டு ஏசு நாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் புது நெருப்பு மந்திரிக்கப்பட்டு, புதிய ஒளியேற்றி நள்ளிரவில் திருப்பலி நடைபெறும்.இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.


Next Story