திருச்சியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
திருச்சியில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
திருச்சியில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
40 நாட்கள் தவக்காலம்
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஏசு உயிர்த்தெழுந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். சிறப்பு பிரார்த்தனையிலும் பங்கேற்றனர்.
திருச்சி பாலக்கரை பசிலிக்கா ஆலயம், மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், குணமளிக்கும் மாதா ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, கல்லக்குடி, தா.பேட்டை, உப்பிலியபுரம், துவரங்குறிச்சி என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.
ஏசு உயிர்த்தெழுந்தார்
பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது. ஏசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர்.. திருச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.