பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
ஈகைத்திருநாளான பக்ரீத்பண்டிகை நேற்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், கல் பள்ளி வாசல், சிவகாசியில் ஷபாஸ்கான் கோரி பள்ளிவாசல், அமீர்பாளையம் காட்டுப்பள்ளி வாசல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, நரிக்குடி, தளவாய்புரம், ஆலங்குளம், தாயில்பட்டி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story