ஆடி கடைசி வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி கடைசி வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கடைசி வெள்ளி

ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பூஜை, வழிபாடு நடைபெறுகின்றன. இந்த ஆண்டு ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து எலுமிச்சை பழங்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதேபோல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் வஸ்திர அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோன்று ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், ஜக்கப்பன் நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மன் நாகாத்தம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாவட்டம் முழுவதும்

கிருஷ்ணகிரி அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீயோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story