புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பர்கூர் அருகே உள்ள ஐகொந்தம்கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெங்கட்ரமண சாமி
இதேபோன்று கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உளள வெங்கட்ரமண சாமி கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதி மற்றும் மார்க்கெட் சாலையோரம் உள்ள கடைகளில் பூக்கள், மாலைகள் அதிக அளவில் விற்பனையானது. உழவர் சந்தைகளில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனையானது.