வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

ஓசூர் வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் பிரம்ம மலையில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாதத்தில் வரும் நவராத்திரியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றது. கடந்த 9 நாட்களாக வராகி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் காய்கனிகள், வெற்றிலை, பணம், வெண்ணெய் காப்பு, வளையல் உள்ளிட்ட 9 விதமான பொருட்களை கொண்டு அலங்காரம் செய்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, நிறைவு நாளன்று, வராகி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, கோவிலில் மூலவருக்கு நவ திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story