பெரியகுளம், போடியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


பெரியகுளம், போடியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

பெரியகுளம், போடியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தேனி

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திகேஸ்வரர், கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பெரியகுளம் அருகே ஈச்சமலையில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சிவப்பெருமான், நந்தீஸ்வரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவன் சன்னதியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி‌ மல்லையப்பசுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிவப்பெருமானுக்கு காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


Related Tags :
Next Story