பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் டவுன் மேற்கு தெருவில் பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று 3-வது சனிக்கிழமையையொட்டி பொன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எடப்பாடி, கொங்கணாபுரம், கச்சிப்பள்ளி, பள்ளிப்பட்டி, மூங்கில்காடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். நேற்று மதியம் அவர்கள் ராசிபுரம் நகர எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சக்தி அழைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கால்நடைகளுடன் ராசிபுரம் நகரின் முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்று பெருமாள் கோவிலை வந்தடைந்தனர்.

முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்களை மாடு தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மாடு வரும் வழியில் ஆண், பெண், குழந்தைகள் என பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்து இருந்தனர். அப்போது அவர்களை மாடு தாண்டி சென்றது. மாடு தாண்டி செல்லும்போது அதன் கால்கள் பக்தர்களின் மேல் படாமல் சென்றால் பக்தர்கள் நினைத்தது பலிக்கும் என்ற நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story