சிவன் கோவில்களில் சோமவார சிறப்பு பூஜை


சிவன் கோவில்களில் சோமவார சிறப்பு பூஜை
x

நெல்லையில் சிவன் கோவில்களில் சோமவார சிறப்பு பூஜை நடந்தது

திருநெல்வேலி

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் சோமவார விரதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்த விரதத்தை சந்திரன் கடைபிடித்து மேன்மை அடைந்ததாக ஐதீகம்.

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும் என்பது நம்பிக்கை. அதன்படி கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது, அதனை தொடர்ந்து சுவாமி கைலாசநாதர் -சவுந்தரவல்லி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் 1,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போல் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று சோமவார சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது.


Next Story