கோவில்களில் சிறப்பு பூஜை
ஆங்கில புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிாி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிாி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு பிறப்பு
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள பெரியமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில்கள், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், கவீஸ்வரர் கோவில் சோமேஸ்வரர் கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது.
பெரிய மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு இருந்தது. இதேபோல பிற கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதையொட்டி திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்
புத்தாண்டையொட்டி ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல சூளகிரியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், பிரசன்ன வரதராஜசாமி கோவில், கீழ்த்தெருவில் உள்ள சீதாராம ஆஞ்சநேயர் கோவில், அய்யப்பன் கோவில், கோபசந்திரம் வெங்கடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி
புத்தாண்டையொட்டி வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சை மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு வெண்ணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் பூதிமுட்லு கிராமத்தில் உள்ள கோதண்டராம சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பர்கூர்
பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி கிராமத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி மலை மீதுள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று பர்கூர் அய்யப்பன் கோவில், ராகி மாரியம்மன் கோவில், சாந்த காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராயக்கோட்டை
ராயக்கோட்டையில் உள்ள விஷ்ணு கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கெலமங்கலம் அருகே உள்ள ஒசபுரம் கிராமத்தில் ராமலட்சுமணன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அங்குள்ள 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூஜை பொருட்கள்
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கடைகளில், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது.