வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை


வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
x

ஜலகண்டாபுரம் அருகே உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

சேலம்

மேச்சேரி

சேலம் ஜலகண்டாபுரம் பஸ் நிலையம் அருகில் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. வலம்புரி செல்வ விநாயகர் வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story