வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

நாமக்கல் வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை எம்.ஜி.ஆர். நகரில் தங்காயி மற்றும் ஸ்ரீ வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை பஞ்சமி திதி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

அதன்படி நேற்று முன்தினம் தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி வராகி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வராகி அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது பிரார்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.


Next Story