முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் வைகாசி விசாகத்தை ஒட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

வைகாசி விசாகம்

தமிழ் கடவுளான முருகப் பெருமான் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். இதையொட்டி வைகாசி விசாகமான இன்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்கடன்

இதேபோல குமரமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story