கோவிலில் சிறப்பு பூஜை


கோவிலில் சிறப்பு பூஜை
x

சாத்தான்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பலவேசக்கார சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பலவேசக்கார சுவாமி கோவிலில் வைகாசி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் சுந்தராட்சி அம்மன் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. இரவில் கணபதி ஹோமம், தொடர்ந்து பலவேசகார சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 108 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜை, சாமக்கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story