கோவில்களில் சிறப்பு பூஜை


கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆவணி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நீலகிரி

கூடலூர்,

ஆவணி மாத அமாவாசையையொட்டி கூடலூர் பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story