செம்மினிபட்டியில் லட்சுமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை


செம்மினிபட்டியில் லட்சுமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
x

செம்மினிபட்டியில் லட்சுமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியில் இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த ராகுகேது நிவர்த்தி ஸ்தலம் ஆதி வடிவுடையாள் சமேத ஆதிஈஸ்வரன் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமியையொட்டி லெட்சுமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு பூஜையையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்து செவ்வரளி மலர் தூவி மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் அருள்பாலிக்கும் பரிவார தெய்வங்களான பால கணபதி, பால நாகம்மா, உக்கிர காளி, கருப்பசாமி, ஜடாமுனீஸ்வரர், பைரவர், சப்தகன்னிகள், லஷ்மி நாராயணன், லஷ்மி நாராயணி உள்ளிட்ட நவ சித்தர்கள், காகபுஜண்டர் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆதிமுத்து குமார் தலைமையில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story