வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை


வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
x

வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

கரூர்

கரூர் உழவர்சந்தை அருகே உள்ள வராகி அம்மன் கோவிலில் ஆனி மாத நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த 108 கலச தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story