சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை


சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.அதன்படி தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story