கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜை
கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கரூர்
கிருத்திகையை முன்னிட்டு நேற்று கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள விஷ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பாலமுருகனுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story