பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை


பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை
x

பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

பிரதோஷத்தையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நந்தி பெருமானை தரிசனம் செய்தனர்.

தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, நந்தி பெருமான், பாகவள்ளி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story