அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
x

ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி 2-வது வெள்ளி

ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோன்று ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story